Headlines
Admin-message

பாராளுமன்ற விவகாரங்களில் தலையீடு செய்யும் உரிமை உச்ச நீதிமன்றிற்கு கிடையாது – லக்ஸ்மன் கிரியல்ல

Published by tamilkurall on  | 


பாராளுமன்ற விவகாரங்களில் தலையீடு செய்யும் உரிமை உச்ச நீதிமன்றிற்கு கிடையாது என அவைத் தலைவரும் அமைச்சருமான லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.

குறைநிரப்புப் பிரேரணை உரிய முறையில் நிறைவேற்றப்படவில்லை எனவும், இதற்கு எதிராக உச்ச நிதிமன்றில் வழக்குத் தொடர உள்ளதாகவும் கூட்டு எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் கூறி வருவதாகத் தெரிவித்துள்ளார்.

எனினும் எதிர்க்கட்சியினரால் இதனைச் செய்ய முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமரர் அனுர பண்டாரநாயக்க சபாநாயகராக கடமையாற்றிய காலத்தில் பாராளுமன்ற விவகாரங்களில் உச்ச நீதிமன்றம் தலையீடு செய்ய முடியாது என தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்றில் பல்வேறு குழப்ப நிலைமைகள் ஏற்பட்டுள்ளமை மக்களுக்கு தெரியும் எனவும், தோல்வியைத் தாங்கிக் கொள்ள முடியாதவர்கள் இவ்வாறு குழப்பம் விளைவித்து வருகின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஏதேனும் ஓர் வகையில் மீளவும் ஆட்சியைக் கைப்பற்றி தமது குற்றச் செயல்கள் தொடர்பிலான விசாரணைகளை மூடி மறைக்க சில தரப்பினர் முயற்சித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட குறைநிரப்புப் பிரேரணை 33க்கு 31 என்ற வாக்குகளின் அடிப்படையில் நிறைவேற்றப்பட்டதாகவும் மீளவும் வாக்குகளை எண்ண வேண்டிய அவசியமில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனை நண்பர்களுடன் பகிரவும்.




    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

© 2016 tamilkurall All Rights Reserved.
back to top