Headlines
Admin-message

பாடசாலைகளுக்கிடையிலான தேசிய சதுரங்கப் போட்டியில் கிளிநொச்சி மாணவர்கள்

Published by tamilkurall on  | 


இலங்கைப் பாடசாலைகளுக்கான சதுரங்கச் சங்கத்தின் 2016ஆம் ஆண்டுக்கான தேசியமட்ட தனியாள் சதுரங்கப் போட்டிகள் நடைபெற்றுவருகின்றது.
இதில் 15, 17, 20 வயதுப் பிரிவுகளுக்கான போட்டிகள், கேகாலை தோலாங்கமுவ மத்திய மகா வித்தியாலயத்தில் நேற்று முன்தினம் (06) ஆரம்பமாகிய இன்று வரை இடம்பெறுகின்றது.
இந்தப் போட்டியில் கிளிநொச்சி மாவட்டத்தில் இருந்து 14 பேர் விளையாடி வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தில் இருந்து பங்குபற்றியுள்ள மாணவர்களின் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
அதன்படி, 15 வயது ஆண்கள் தே.சபில்சன்-கிளிநொச்சி ம.வி ச.வருணன் - கிளிநொச்சி ம.வி க.கீதசஞ்சாரன் - கிளிநொச்சி மத்திய ம.வி சி.விக்னேஷ் - கிளிநொச்சி ம.வி கே. துவாரகன் - கிளிநொச்சி ம.வி 15 வயது பெண்கள் சு. தனுஷா - உருத்திரபுரம் ம. வி அ. பவித்திரா - பளை மத்திய கல்லூரி 17 வயது ஆண்கள் ஜீ. குகப்பிரியன். - கிளிநொச்சி ம.வி ரீ. தஜீகன் - கிளிநொச்சி ம.வி 17 வயது பெண்கள் கே. ஶ்ரீதாரணி -தரும்புரம் மத்திய கல்லூரி கே.பவனியா - உருத்திரபுரம் ம. வி என். டிலானி - தரும்புரம் மத்திய கல்லூரி 20 வயது ஆண்கள் ஜெ.சஞ்சீவராஜா-கிளிநொச்சி மத்திய ம.வி சி. டிலக்சன் - கிளிநொச்சி மத்திய ம.வி ஆகியோர் தற்போது விளையாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


இதனை நண்பர்களுடன் பகிரவும்.




    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

© 2016 tamilkurall All Rights Reserved.
back to top