இலங்கை இராணுவத்துக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் சில இராணுவ வீரர்கள் நடந்து கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் காலில் வீழ்ந்து வணங்கியமையால் அது சர்ச்சையை தோற்றுவித்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதியான மஹிந்த ராஜபக்ஷவுக்கு பாதுகாப்பு வழங்கி வந்த இராணுவ வீரர்கள் அண்மையில் நீக்கப்பட்டனர். அவர்களுக்கு பதிலாக விசேட பயிற்சி பெற்ற பொலிஸார் நியமிக்கப்பட்டனர்.
பாதுகாப்பு பணியிலிருந்து நீக்கப்பட்ட இராணுவ வீரர்கள் மஹிந்தவின் காலில் வீழ்ந்து வணங்கியமை இராணுவத்தை அவமரியாதை செய்ததாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இது தொடர்பான காட்சிகளும் ஊடகங்கள் வாயிலான பதிவு செய்யப்பட்டுள்ளன.
பாதுகாப்பு கடமையில் இருந்து இராணுவத்தினர் அவ்வாறு வணக்குவது முறையற்ற செயலாகும். இந்நிலையில் மஹிந்தவின் காலில் வீழ்ந்த இராணுவ வீரர்களுக்கு எதிராக விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
மஹிந்த ராஜபக்ச கோரிக்கைக்கமைய தங்கள் அவ்வாறு செயற்பட்டுள்ளதாக குறித்த இராணுவ வீரர்கள் பதிலளித்துள்ளனர்.
மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக செயற்பட்ட காலப்பகுதியில் மேர்வின் சில்வாவை தனது காலின் கீழ் அமர வைத்திருந்தார். இவ்வாறான அடிமை நிலைக்குள் இராணுவனத்தினரை வைத்திருக்க மஹிந்த முயற்சித்ததாக இராணுவ கட்டளை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
முழுமையாக இராணுவத்தின் கௌவரத்தை பாதிக்கும் ஒழுக்காற்றுக்கு எதிரான செயற்பாடு ஒன்று என்பதனால் அந்த இராணுவ வீரர்களிடம் விசாரணை மேற்கொண்டாலும், அவர்கள் தொடர்பில் இராணுவ சட்டம் விதிகளுக்கமைய ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ள முடியுமா என்று ஆராய வேண்டும் என சட்ட பிரிவு குறிப்பிட்டுள்ளது.
இராணுவத்தினரை ஈடுபடுத்தி வணங்க வைத்திருப்பது மிகவும் திட்டமிட்ட முறையில் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், இராணுவத்தினர் சீரூடையில் இல்லாத நிலையில் இதனை மன்னிப்பதற்கான வாய்ப்பு உள்ளதாக சட்டம் உத்தியோகத்தர்களின் கருத்தாகும்.
மஹிந்த ராஜபக்சவின் பாதுகாப்பிற்கு 103 இராணுவ அதிகாரிகள் உட்பட வீரர்கள் செயற்பட்டுள்ள நிலையில் அவர்களில் சிலர் மாத்திரமே மஹிந்தவை வணங்கியுள்ளனர்.

