Headlines
Admin-message

நட்சத்திர ஆமைகளை எடுத்துச் சென்றவர்கள் கைது

Published by tamilkurall on  | 


ஆடம்பர சொகுசு வாகனம் ஒன்றில் 25 நட்சத்திர ஆமைகள் மற்றும் மூன்று ஆடுகளை ஏற்றிச் சென்ற மூன்று பேரை புத்தளம், பள்ளம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் ஆடிகாமம், களுத்துறை மற்றும் பேருவளை பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர்கள் ஆமைகளையும் ஆடுகளையும் ஆடிகாமம் பிரதேசத்தில் இருந்து பேருவளைக்கு கொண்டு செல்லவிருந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்படும் போது சந்தேக நபர்கள் பொலிஸாருக்கு 30 ஆயிரம் ரூபாவை இலஞ்சமாக கொடுக்க முயற்சித்துள்ளனர்.
சந்தேக நபர்கள் நீண்டகாலமாக இந்த வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேக நபர்கள் ஆனமடுவ நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளனர்.



இதனை நண்பர்களுடன் பகிரவும்.




    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

© 2016 tamilkurall All Rights Reserved.
back to top