குறித்த சம்பவம் சனிக்கிழமை (07) காலை வேளையில் நடந்துள்ளதாக மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
புளியங்குளத்தில் இருந்து வவுனியா நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் நிறுவனமொன்றிற்கு சொந்தமான ஹன்டர் வாகனமொன்று, வீதியை கடந்து கொண்டிருந்த சிறுவன் மீது மோதி பின்னர், மறுபுறத்தில் சென்றுக் கொண்டிருந்த சைக்கிளுடனும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதன்போது சைக்கிளில் பயணித்த மூவரும் காயமடைந்துள்ளனர்.
இந்த நிலையில், விபத்தில் படுகாயமடைந்த சிறுவன் வவுனியா பொது வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக புளியங்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

