Headlines
Admin-message

மஹிந்தவினால் சீசெல்ஸில் ஆரம்பிக்கப்பட்ட நிறுவனங்கள் மூடுவிழா காணும் தறுவாயில்

Published by tamilkurall on  | 


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச சீசெல்ஸில் ஆரம்பித்த திட்டங்கள் தற்போது மூடப்படும் நிலைக்கு உள்ளாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2014ஆம் ஆண்டு ஜூனில் சீசெல்ஸில் மஹிந்த ராஜபக்சவினால் இலங்கை வங்கி, ஸ்ரீலங்கா காப்புறுதி, மிஹின் எயார் மற்றும் நவலோக்க வைத்தியசாலை என்பன திறக்கப்பட்டன.
இதில் ஸ்ரீலங்கா காப்புறுதியின் செயற்பாடுகள் இரண்டு மாதத்தில் செயலிக்க செய்யப்படவுள்ளன. நவலோக்க வைத்தியசாலையும் இந்த மாதத்துடன் தமது செயற்பாடுகளை நிறுத்தவுள்ளது.
தற்போது அந்த வைத்தியசாலைக்கு சீசெல்ஸில் 5.2 மில்லியன் ரூபாய்கள் நட்டமேற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மிஹின்எயாருக்கும் தமது செயற்பாடுகளை நிறுத்தவுள்ளது.
எனினும் இலங்கை வங்கியின் கிளை இலாபத்துடன் செயற்பட்டு வருவதால் அதன் செயற்பாடுகளை தொடர முடியும் என்று இலங்கை வங்கியின் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதனை நண்பர்களுடன் பகிரவும்.




    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

© 2016 tamilkurall All Rights Reserved.
back to top