Headlines
Admin-message

நாட்டின் ஸ்திரத்தன்மையை குழப்ப முயற்சி – குற்றப் புலனாய்வுப் பிரிவு எச்சரிக்கை

Published by tamilkurall on  | 


நாட்டின் ஸ்த்திரத்தன்மையை குழப்ப சில தரப்பினர் முயற்சித்து வருவதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

வடக்கில் மீளவும் யுத்தம் இடம்பெறக் கூடுமெனவும், தமிழீழ விடுதலைப் புலிகள் மீள இயங்கத் தொடங்கியுள்ளதாகவும் சில தரப்பினர் திட்டமிட்ட வகையில் பிரச்சாரம் செய்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த தரப்பினர் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

அரசியல்வாதிகள், பாதுகாப்பு தரப்பினைச் சேர்ந்தவர்கள் மற்றும் முன்னாள் போராளிகள் உள்ளிட்ட சில தரப்பினர் இவ்வாறு நாட்டில் குழப்ப நிலைமையை விளைவிக்க முயற்சித்து வருகின்றனர் என தெரிவிக்கப்படுகிறது.

சாவகச்சேரியில் தற்கொலை அங்கி மற்றும் வெடிபொருட்கள் மீட்கப்பட்டமை உள்ளிட்ட சம்பவங்களும் இந்த தரப்பின் திட்டமிட்ட ஓர் செயல் என்பது விசாரணகைளின் மூலம் தெரியவந்துள்ளது.

நாட்டை குழப்ப நினைக்கும் தரப்பினர் சாவகச்சேரி தற்கொலை அங்கி மற்றும் வெடிபொருள் மீட்பு சம்பவத்தின் பின்னணியில் இயங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதனை நண்பர்களுடன் பகிரவும்.




    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

© 2016 tamilkurall All Rights Reserved.
back to top