Headlines
Admin-message

பெண் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைப்பு

Published by tamilkurall on  | 


பெண் ஒருவர் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீமூட்டிய சம்பவம் ஒன்று மாத்தறை - வெலிகம, ரலகம பிரதேசத்தில் நடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சம்பவம் நேற்றிரவு நடந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட பெண்ணின் கள்ளக் கணவனே இந்த செயலை செய்துள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
தீக்காயங்களுக்கு உள்ளான 33 வயதான பெண் வெலிகம - வலான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் உடல் நிலை மோசமானதன் காரணமாக மாத்தறை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
பெண் மீது தீவைத்த சந்தேகநபர் பிரதேசத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

இதனை நண்பர்களுடன் பகிரவும்.




    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

© 2016 tamilkurall All Rights Reserved.
back to top