வெள்ளை வான்களில் பாதுகாப்பு தரப்பினர் கடத்தப்படுவதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என குறிப்பிட்டுள்ளனர்.
சட்ட ரீதியான அடிப்படையிலேயே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அரசாங்க நிறுவனங்கள் எந்தவிதமான சட்டவிரோத கடத்தல்களிலும் ஈடுபடவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோதமான கடத்தல்களோ அல்லது கைதுகளோ இடம்பெறவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, சட்டவிரோத கைதுகள் இடம்பெறவில்லை என பொதுநிர்வாக அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
தேசியப் பாதுகாப்பிற்கு எவ்வித அச்சுறுத்தல்களும் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

