ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றாடல் திட்டத்துக்கான நிறைவேற்று பணிப்பாளராக அவரை செயலாளர் பன் கீ மூன் நியமித்துள்ளார்.
குறித்த சுற்றாடல் திட்டம் மேற்கொண்ட பரிந்துரைக்கு அமையவே எரிக் சொல்ஹெய்ம் அந்த பதவிக்கு நியமிக்கப்பட்டு;ள்ளார்.
சொல்ஹெய்ம், தற்போது ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி துணைக்குழுவின் தலைவராக 2013ஆம் ஆண்டு முதல் செயற்பட்டு வருகிறார்.
சொல்ஹெய்ம், 2000 ஆண்டுகளில் இலங்கையில் சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக இலங்கை அரசாங்கத்துக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் ஏற்பாட்டாளராக செயற்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

