Headlines
Admin-message

முச்சக்கர வண்டியில் பயணித்த இளைஞன் மீது பொலிஸார் தாக்குதல்!

Published by tamilkurall on  | 


வவுனியாவில் ஆட்டோ ஒன்றில் சென்ற இளைஞன் மீது போக்குவரத்து பொலிசார் தாக்குதல் நடத்திய சம்பவம் நேற்றிரவு 8.50 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா நகரில் இருந்து கண்டி வீதி வழியாக பயணித்த ஆட்டோ ஒன்றினை வவுனியா, வைத்தியசாலை சுற்றுவட்ட வீதியில் கடமையில் இருந்த போக்குவரத்து பொலிசார் இருவர் இடைநிறுத்தியுள்ளனர். மது போதையில் அவர்கள் வந்தார்களா என சாரதியின் வாயினை போக்குவரத்து பொலிசார் ஒருவர் முகர்ந்து பார்த்ததுடன் அவர்களது ஆவணங்களையும் பார்த்துள்ளார்.
இதன்போது, குறித்த ஆட்டோவில் பின்னுக்கு இருந்த வந்த இளைஞன் மது போதையா என பலூன் வைத்து தானே பார்ப்பார்கள். இப்படி முகர்ந்து பார்பதில்லேயே என தெரிவித்துள்ளார். இதன்போது முகர்ந்து பார்த்த போக்குவரத்து பொலிசார் குறித்த இளைஞனை ஆட்டோவில் இருந்து இறக்கி தாக்கியுள்ளார். இதனையடுத்து குறித்த இளைஞன் பொலிசாருடன் தர்க்கித்துக் கொண்ட போது அவ்விடத்தில் மக்கள் கூடியுள்ளனர். உடனடியாக வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு ஆட்டோவில் அவர்கள் இருவரையும் அழைத்து வந்த பொலிசார் சமரசம் செய்ய முயன்றுள்ளனர்.
இருப்பினும் குறித்த இளைஞன் தாக்குதல் நடத்திய பொலிசாருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வவுனியா போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரியிடம் தெரிவித்திருந்ததுடன், தாக்குதல் நடத்திய பொலிசாரின் பெயர் மற்றும் அவரது இலக்கம் என்பவற்றை தருமாறு கோரினார். எனினும் வவுனியா பொலிஸ் நிலையத்தில் நின்ற போக்குவரத்து பொலிசார் எவரும் அதனை கொடுக்க மறுத்துள்ளதுடன், தாக்குதல் நடத்திய பொலிசாரும் அதனை வழங்க மறுத்துள்ளார்.
இது தொடர்பில் வவுனியா பொலிஸ் நிலைய போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரியிடம் கேட்ட போது, இது ஒரு சின்னப் பிரச்சனை. இது தொடர்பில் நான் கருத்து கூற முடியாது. குறித்த பொலிசார் பற்றிய விபரங்களையும் தர முடியாது என தெரிவித்திருந்தார்.

இதனை நண்பர்களுடன் பகிரவும்.




    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

© 2016 tamilkurall All Rights Reserved.
back to top