Headlines
Admin-message

சமஷ்டிக் கோரிக்கையில் எதுவித தவறும் கிடையாது! ஆர். சம்பந்தன் வலியுறுத்தல்

Published by tamilkurall on  | 


ஒரே நாட்டுக்குள் சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வைக் கோருவதில் எதுவித தவறும் கிடையாது என்று எதிர்க்கட்சித் தலைவர் ஆர். சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்.
இன்றைய சிங்கள வார இதழ் ஒன்றுக்கு அளித்துள்ள நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
குறித்த நேர்காணலின் போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் ஆர். சம்பந்தன் தெரிவித்துள்ளதாவது, இலங்கையில் சமஷ்டி அடிப்படையிலான ஆட்சி முறை குறித்து முதலில் சிங்களத் தலைவர்களே கோரிக்கை விடுத்தனர்.
1926ம் ஆண்டு கண்டி சிங்களத் தலைவர்கள் சமஷ்டி நிர்வாகம் குறித்த கோரிக்கையை சோல்பரி ஆணைக்குழு முன்பாக முன்வைத்திருந்தனர். சமஷ்டி என்பது நாட்டைப் பிரிப்பதற்கு அன்றி ஒன்றிணைத்து ஆட்சி செய்வதற்கு என்பதை அவர்கள் அறிந்திருந்தார்கள்.
சமஷ்டி என்பது ஒரு நாடு, இரண்டு நிர்வாகம் என்பது தவிர ஒருபோதும் இரண்டு நாடுகளாக பிளவுபடுவதில்லை. உலகில் ஏராளமான சமஷ்டி ராராஜ்ஜியங்கள் நடைமுறையில் உள்ளன.
வடக்கில் தற்போது விடுதலைப் புலிகள் இல்லை. எனவே பொதுமக்களின் காணிகளை ராணுவத்தினர் விடுவிக்க வேண்டும்.
நயினா தீவில் புத்தர் சிலை அமைக்கும் விவகாரம் சட்டத்திற்கு உட்பட்டு நடைபெற வேண்டும். இனவாதிகள் கூறுவது போன்று சட்டவிரோதமாக எதனையும் மேற்கொள்ள முடியாது என்றும் ஆர். சம்பந்தன் தனது நேர்காணலில் தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.

இதனை நண்பர்களுடன் பகிரவும்.




    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

© 2016 tamilkurall All Rights Reserved.
back to top