பிரிட்டனில் நடைபெறவுள்ள ஊழல் ஒழிப்பு மாநாடு ஒன்றில் பங்குபற்றவே ஜனாதிபதி பிரிட்டன் விஜயம் செய்ய உள்ளார்.
கடந்த ஜனவரியில் மொல்டாவில் வைத்து பிரித்தானிய பிரதமர் டேவிட் கமருன் விடுத்த அழைப்பிற்கு அமைய, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஊழல் ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்க உள்ளார்.
இந்த மாநாட்டில் உலகின் பல நாடுகளது தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.
ஊழல் ஒழிப்பு தொடர்பில் பொதுவான இணக்கப்பாடு ஒன்றை எட்டுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, பிரித்தானிய விஜயத்தை முடித்துக் கொள்ளும் ஜனாதிபதி எதிர்வரும் 13-14ம் திகதிகளில் இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள் உள்ளார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பிற்கு அமைய ஜனாதிபதி இந்த விஜயத்தை மேற்கொள்ள உள்ளார்.

