Headlines
Admin-message

நாடாளுமன்றை நகைச்சுவையாக எடுத்துக்கொள்ளக் கூடாது: காமினி ஜயவிக்ரம

Published by tamilkurall on  | 


நாடாளுமன்றை நகைச்சுவையாக எடுத்துக்கொள்ளக்கூடாது என அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா தெரிவித்துள்ளார்.
சிங்கள பத்திரிகையொன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
நாடாளுமன்றில் இதற்கு முன்னரும் இவ்வாறான நிலைமைகள் ஏற்பட்டுள்ளன.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் இவ்வாறான செயற்பாடுகளை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.
இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண நான் இதற்கு முன்னரும் தலையீடு செய்திருக்கின்றேன்.
மஹிந்த ராஜபக்சவின் பாதுகாப்புப் பற்றி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூச்சலிடுவதில் நகைப்பிற்குரியது.
இதற்கு முன்னரும் சந்திரிக்கா பண்டாரநாயக்கவின் பாதுகாப்பு தொடர்பிலும் பிரச்சினைகள் எழுந்த போதிலும் இவ்வாறான குழப்பங்கள் விளைவிக்கப்படவில்லை.
குழப்பங்களை விளைவிப்பதன் மூலம் இவ்வாறான பிரச்சினைகளுக்கு எந்த வகையிலும் தீர்வு காண முடியாது எனவும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முடியும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதனை நண்பர்களுடன் பகிரவும்.




    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

© 2016 tamilkurall All Rights Reserved.
back to top