அண்மைக்காலமாக கொலை, கொள்ளை, வாள்வெட்டு, குழுச் சண்டை, போதைப் பொருள் பாவனை, கலாசார சீரழிவு போன்ற விடயங்கள் மக்களின் வாழ்வியலை பாதிக்கும் விதமாக அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இத்தகைய வன்முறைகளை தடுத்து நிறுத்த அனைவரும்ஒன்றிணைந்து செயற்படவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். வடக்கில் அதிகரித்துள்ள வன்முறைகள் தொடர்பில் யாழ் ஆயர் வெளியிட்ட அறிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
எமது வாழ்வியல் திட்டமிட்டு அழிக்கப்படுகிறதா எனக் கேள்வி எழுப்பியுள்ள ஆயர் இது தொடர்பில் விரைந்து செயற்படவேண்டும் என்றும் சமூகத்தில் உள்ள புத்தஜீவிகள், விரிவுரையாளர்கள், ஊடகவியலாளர்கள், சட்டத்தரணிகள்,கல்வியலாளர்கள், வல்லுனர்கள்அனைவரும் உரிய தரப்புக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
குற்றச்செயல்களை தடுப்பது ஒட்டுமொத்த சமூகத்தின் விழிப்புணர்வில் தங்கியுள்ளதாகவும் அக்கம் பக்கத்தில் நடைபெறும் இந்த குற்றச் செயல்களை வெறுமனே பார்த்திருக்காது அதற்கு எதிர்ப்பு வெளியிடவேண்டும் என்றும் யாழ் ஆயர் குறிப்பிட்டுள்ளார்.
சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டியவர்கள் இது தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கல்வியில் எமது சமூகம் கீழ்நோக்கிச் செல்ல சமூகச் சீரழிவே காரணம் என்றும் இதனால் மக்கள் மத்தியில் அச்சமும் பீதியும் நிலவுதாகவும் ஆயர் மேலும் தெரிவித்துள்ளார்.

