தேர்தல் பிரசாரத்தில் பா.ம.கவையும் தே.மு.தி.கவையும் விமர்சிக்கப் போவதில்லை என்று நாம் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அதிரடியாக முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பேசிய சீமான் பிரசார கூட்டம் முடிந்ததும் நிர்வாகிகளை சந்தித்துப் பேசியுள்ளார்.
அப்போது விஜயகாந்தையும் ராமதாஸையும் விமர்சித்துப் போவதில்லை என்ற முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. மக்களின் கவனத்தை சிதற விடக் கூடாது என்பதற்காக தான் இந்த முடிவை அவர் எடுத்துள்ளார்.
இது தொடர்பாக வெளியான தகவலில், இந்தத் தேர்தலில் கருணாநிதி, ஜெயலலிதா ஆகிய இருவருக்கும் மாற்றாக நாம் தமிழர் போட்டியிடுகிறது என்ற தோற்றமே மக்களிடம் வரவேண்டும்.
பா.ம.கவும் தே.மு.தி.கவும் அதிமுகவோடு கூட்டணி வைத்தவர்கள் தான். ஆனால் அவர்கள் அந்த இரு கட்சிகளுக்கும் மாற்று என்று கூறமுடியாது. எனவே அந்த இடத்தை நாம் தான் பூர்த்தி செய்ய வேண்டும்.
அதேபோல் பாஜகவும் மாற்றாக உருவெடுக்கும் என்று கூற முடியாது. அந்த இரு கட்சிகளின் முதுகிலே பயணிக்கவே பாஜக விரும்புகிறது. இதனாலே ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோரின் பெயர்களை கூட சொல்லாமல் மோடி தமிழக ஆட்சி முறையை விமர்சனம் செய்து பிரசாரம் செய்தார்.
எனவே நமது எதிரியாகிய கருணாநிதி, ஜெயலலிதாவை மட்டும் வலுவாக எதிர்ப்பதன் மூலம் வாக்காளர்கள் நமது அணியின் பக்கம் திரள்வார்கள் என்று ஆலோசித்தாராம் சீமான்.

