Headlines
Admin-message

திருகோணமலையில் இரகசிய தடுப்பு முகாம்களை கண்டோம்: ஐ.நா நிபுணர்கள்

Published by tamilkurall on  | 


தமது விசாரணை நடவடிக்கைகளுக்கு இலங்கை அரசாங்கம் முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்கியதாக ஐ.நா நிபுணர்கள் தெரிவித்தார்கள்.

மேலும் தாம் முன்வைத்த கோரிக்கைகள் அனைத்தையும் அரசாங்கம் செய்து கொடுத்ததாகவும், இதன்மூலம் தமது விசாரணைகளில் முழுமையான திருப்தியடைந்துள்ளதாகவும் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கூறினார்கள்.
இதேபோல் தமது கோரிக்கைகளையும் அரசாங்கம் செயற்படுத்தும் என தாம் நம்புவதாக அவர் நம்பிக்கை வெளியிட்டார்.
தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,திருகோணமலை கடற்படை முகாமிற்கு தாம் விஜயம் செய்திருந்ததாகவும், அதன்போதே இரகசிய தடுப்பு முகாம்களை கண்டதாகவும் ஐ.நா நிபுணர் குழுவினர் கூறினார்கள்.
இந்த இரகசிய தடுப்பு முகாம்கள் கடந்த காலங்களில் பயன்படுத்தப்படவில்லை என எவரும் தமக்கு கூறவில்லை எனவும், இந்த தடுப்பு முகாம் குறித்து யாரும் கருத்து தெரிவிக்கவுமில்லை எனவும் ஐ.நா நிபுணர்கள் இதன்போது கவலை வெளியிட்டார்கள்.

இதனை நண்பர்களுடன் பகிரவும்.




    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

© 2016 tamilkurall All Rights Reserved.
back to top