Headlines
Admin-message

வட் வரி அதிகரிப்புக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: விமல் வீரவன்ச

Published by tamilkurall on  | 


அரசாங்கத்தினால் அதிகரிக்கப்பட்ட வட் வரி அதிகரிப்புக்கு எதிராக சட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
வட் வரி அதிகரிப்பு குறித்து நாடாளுமன்றத்தில் கலந்துரையாடிய போது, இதற்கான திருத்த சட்ட மூலம் நாடாளுமன்றத்தால் சமர்ப்பிக்கப்படாமல் எந்த தீர்மானமும் எடுக்க முடியாது என்று விமல் வீரவன்ச கூறியிருந்தார்.
வர்த்தமானி அறிவித்தல் மூலம் வரிகளை அதிகரிக்க முடியாது என்பதற்கு நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
எனவே வட் வரி அதிகரிப்பிற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கம் அதிகளவான கடனை வாங்கி, அந்தக் கடன் சுமையை மக்கள் மீது தினிக்கின்றது என்றும், ராஜபக்ஷ அரசாங்கத்தில் கூட மக்களுக்கு இப்படி ஒரு சுமை இருக்கவில்லை என்றும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனை நண்பர்களுடன் பகிரவும்.




    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

© 2016 tamilkurall All Rights Reserved.
back to top