கெக்கிராவ பஸ் நிலையத்தில் இரு குழுக்களுக்கிடையில் மோதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த மோதலில் இருவர் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக கெக்கிராவ ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய நால்வர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
ஐக்கிய தேசிய கட்சியுடன் தொடர்புடைய இரு குழுக்களும், மே தினம் குறித்து கலந்துரையாடலில் ஈடுப்பட்டிருந்த போதே வாக்குவாதம் ஏற்பட்டு இந்த மோதல் சம்பவம் இடம் பெற்றுள்ளது என்று பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்

