Headlines
Admin-message

“ முற்பகல் 11.30 –1.30 காலப்பகுதியில் மாணவர்களை வெளியில் செல்வதற்கு அனுமதிக்க வேண்டாம்”

Published by tamilkurall on  | 


நாட்டில் பல்­வேறு பகு­தி­க­ளிலும் வெப்பநிலை அதி­க­ரித்து காணப்­ப­டு­வதால் முற்­பகல் 11.30 மணி முதல் பிற்­பகல் 1.30 மணி வரை­யி­லான காலப்­ப­கு­தியில் பாட­சாலை மாண­வர்­களை வகுப்­ப­றையை விட்டு வெளியில் செல்­வ­தற்கு அனு­ம­திக்க வேண்­டா­மென சுகா­தார போசணை மற்றும் சுதேச வைத்­திய அமைச்சு பாட­சாலை அதி­பர்­களை வலி­யு­றுத்­தி­யுள்­ளது.
இது தொடர்பில் அமைச்சு விடுத்­துள்ள அறிக்­கையில் மேலும் குறிப்­பி­ட்டுள்ளதாவது,
கடந்த சில மாதங்­க­ளாக பல மாவட்­டங்­களில் வெப்­ப­நிலை அதி­க­ரித்து காணப்­ப­டு­கி­றது. அதி­க­ரித்த வெப்­ப­மா­னது பாட­சாலை மாண­வர்­களை அதி­க­மாக பாதிக்கச் செய்­கின்­றது.
எனவே மாண­வர்­களின் பாது­காப்பை உறு­திப்­ப­டுத்தும் வகை­யி­லான நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ள வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். அந்த வகையில் வெயில் அதி­க­ரித்த காலப்­ப­கு­தியில் மாண­வர்­களின் வெளிப்­பாட விதா­னங்­களை தவிர்த்­துக்­கொள்­ளு­மாறு அமைச்சு ஆலோ­சனை வழங்­கு­கி­றது.
மேலும் வகுப்­ப­றை­களில் கத­வுகள், ஜன்­னல்கள் திறக்­கப்­பட்ட நிலையில் காற்­றோட்­ட­மான சூழலில் மாண­வர்­களின் கற்றல் செயற்­பா­டு­களை முன்­னெ­டுத்துச் செல்ல நட­வ­டிக்கை எடுப்பதோடு முடிந்த வரை மாணவர்களுக்கு தேவையான சுத்தமான குடிநீர் வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்குமாறும் அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனை நண்பர்களுடன் பகிரவும்.




    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

© 2016 tamilkurall All Rights Reserved.
back to top