Headlines
Admin-message

வெள்ளவத்தையில் கைது செய்யப்பட்ட தாய்லாந்து பாலியல் தொழிலாளிக்கு எயிட்ஸ்!

Published by tamilkurall on  | 


வெள்ளவத்தையில் அண்மையில் கைது செய்யப்பட்ட தாய்லாந்து நாட்டு பாலியல் தொழிலாளிக்கு எயிட்ஸ் நோய் காணப்படுவதாக மருத்துவ பரிசோதனைகள் மூலம் தெரியவந்துள்ளது.
குறித்த பாலியல் தொழில் மையத்திலிருந்த ஐந்து இலங்கை பெண் பாலியல் தொழிலாளிகளும் இரண்டு தாய்லாந்து பெண் பாலியல் தொழிலாளிகளும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
கைது செய்யப்பட்ட பாலியல் தொழிலாளிகள் மருத்துவ பரிசோதனைக்காக முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
குறித்த பெண்களிடம் பலர் பாலியல் சேவை பெற்றுக் கொண்டுள்ளதுடன், எயிட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்ட பெண்ணிடமும் பலர் பாலியல் சேவை பெற்றுக்கொண்டுள்ளனர்.
இந்நிலையில், குறித்த பெண் பாலியல் தொழிலாளிகள் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளனர்.
வெள்ளவத்தை கரையோர வீதி 42ஆம் இலக்க கட்டடத்தில் இந்த பாலியல் தொழில் மையம் இயங்கி வந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, இலங்கையில் அண்மைக் காலமாக எயிட்ஸ் நோய்த் தொற்றாளிகளின் எண்ணிக்கை உயர்வடைந்து செல்வதாக சுகாதார அமைச்சு அண்மையில் அறிக்கை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதனை நண்பர்களுடன் பகிரவும்.




    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

© 2016 tamilkurall All Rights Reserved.
back to top