Headlines
Admin-message

நாட்டை பிரிக்க முயலும் விக்னேஸ்வரன் ஒரு துரோகி! ஜாதிக ஹெல உறுமய

Published by tamilkurall on  | 


வடக்கு மாகாணசபையில் நிறைவேற்றப்பட்ட சமஸ்டி தீர்வு தொடர்பான அரசியல் அமைப்புயோசனை தொடர்பில் நாட்டின் தலைவர்கள் எவரும் கண்டுக்கொள்ளவில்லை என்று ஜாதிக ஹெலஉறுமய குற்றம் சுமத்தியுள்ளது.
கட்சியின் தலைவர் ஓமல்பே சோபித தேரர் இந்தக்குற்றச்சாட்டை இன்று செய்தியாளர்சந்திப்பு ஒன்றின்போது சுமத்தினார்.
இது வருந்ததக்க சூழ்நிலை என்றும் அவர் குறிப்பிட்டார்.இந்தநிலையில் வடக்குமாகாணசபையின் தீர்மானத்துக்கு எதிராக மேல்மாகாணசபை தீர்மானத்தைநிறைவேற்றியுள்ளது.
எனினும் ஏனைய மாகாணசபைகள் எவையும் தமக்கு முதுகெலும்பு இருப்பதை காட்டவில்லை என்றுதேரர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் தமிழ் மக்களுக்கு விசேடமாக பிரச்சினை எதுவும் இல்லை என்றும் அவர்சுட்டிக்காட்டினார்.வடக்கில் உள்ள மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையே தெற்கில் உள்ள மக்களும்எதிர்கொள்வதாக அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை இந்த செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய ஜாதிக ஹெல உறுமயவின்தேசிய அமைப்பாளர்நிசாந்த ஸ்ரீ வர்ணசிங்க, நாட்டை பிரிக்க முனைவதால் வடக்கின் முதலமைச்சர்விக்னேஸ்வரன் ஒரு துரோகி என்று வர்ணித்தார்.

இதனை நண்பர்களுடன் பகிரவும்.




    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

© 2016 tamilkurall All Rights Reserved.
back to top