அகுரஸ்ஸ - லத்துவ பிரதேசத்தில் நில்வளா கங்கைக்கு அருகிலிருந்து நேற்று இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
பலா மரத்தில் சிக்குண்ட நிலையில் குறித்த சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
அகுரஸ்ஸ - லத்துவ பிரதேசத்தை சேர்ந்த 27 வயதான அரபரகொடகே இந்திரஜித் புஸ்பகுமார என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த பகுதியில் வீசிய துர்நாற்றத்தை தொடர்ந்து பிரதேசவாசி ஒருவர் பொலிஸாருக்கு வழங்கிய தகவலைத் தொடர்ந்து சடலம் மீட்கப்பட்டுள்ளது.
அத்துடன், இவர் கடந்த ஒன்பது தினங்களுக்கு முன்னர் உயிரிழந்திருக்கலாம் என கூறப்படுகின்றது.
குறித்த சடலம் தற்போது மாத்தறை வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அகுரஸ்ஸ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

