என்னை உட்பட 90ஆயிரம் பெண்களை விதவையாக்கியது கடந்த அரசாங்கம் என சிறுவர் அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் லங்காசிறிக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்தார்.
அத்துடன், விதவைகளாக தகுதியற்ற இளம் பெண்கள் அந்த அரசிலே விதவைகளாக்கப்பட்டார்கள் என அவர் குறிப்பிட்டார்.
கடந்த அரசிலேயே வெள்ளை வான் கடத்தல், பாலியல் துஷ்பிரயோகம், ஊடகவியலாளர்கள் கொலை என அனைத்து சம்பவங்களும் இடம்பெற்றதாக அவர் குறிப்பிட்டார்.
இதன்போது, பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஸவின் பாதுகாப்பு குறித்து வினவிய போது, மஹிந்த முன்னாள் ஜனாதிபதி அல்ல பாராளுமன்ற உறுப்பினர் என இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, யாருடைய உதவியையும் உதிர்ப்பார்க்காது, யார் எதிர்த்தாலும் முள்ளிவாய்க்காலில் நினைவாலயம் அமைப்பேன் என அவர் உறுதியளித்தார்.
அத்துடன், தமிழ் மக்கள் அதிகமாக வாழும் வடமாகாணத்தில் உயிர்நீத்த உறவுகளுக்காக இவ்வாறு நினைவாலயம் அமைக்கப்படுவதில் அனைவருக்கும் மகிழ்ச்சி ஏற்படும் என சிறுவர் அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார்

