Headlines
Admin-message

சமாதானத்தை தக்க வைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் - ஜனாதிபதி

Published by tamilkurall on  | 


சமாதானத்தை தக்க வைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

மிகவும் கடுமையான முயற்சியின் ஊடாக வென்றெடுக்கப்பட்ட சமாதானத்தை நீடித்து நிலைநாட்டச் செய்வதே, யுத்த வீராகளுக்கு செய்யக்கூடிய உச்சபட்ச மரியாதையும் கௌரவமுமாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

படைவீரர்களை நினைவு கூறும் மாதம் தொடர்பான நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

யுத்தத்தின் போது உயிர் நீத்த, உடல் அவையங்களை இழந்த படைவீரர்களை நினைவு கூர்ந்தும் பாராட்டியும் இந்த நிகழ்வு வருடாந்தம் நடைபெற்று வருகின்றது.

யுத்த வீரர்களின் நலன்களை உறுதி செய்வதில் அரசாங்கம் மிகுந்த கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவித்துள்ளார். படைவீரர் குடும்பங்களின் நலன்களை வழங்குவதுடன் அவர்களுக்கு வரப்பிரசாதங்களும் வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனை நண்பர்களுடன் பகிரவும்.




    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

© 2016 tamilkurall All Rights Reserved.
back to top