Headlines
Admin-message

ரகசியமாக சிங்கப்பூர் சென்ற பிரதமர் ரணில் விக்கிரமசிங்க

Published by tamilkurall on  | 


பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று காலை சிங்கப்பூர் புறப்பட்டுச் சென்றுள்ளதாக பிரதமர் அலுவலக வட்டாரங்களிலிருந்து தெரிய வந்துள்ளது.
இன்று காலை அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக சிங்கப்பூர் புறப்பட்டுச் சென்றுள்ளார்.
இது குறித்து ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்திடம் விசாரித்தபோது குறித்த விமான சேவையின் யூஎல் 302 விமானம் மூலமாக பிரதமர் சிங்கப்பூர் சென்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனினும் பிரதமரின் சிங்கப்பூர் பயணம் கடைசிநேரம் வரை ரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளது.
அத்துடன் சிங்கப்பூருக்கான பிரதமரின் விஜயம் பெரும்பாலும் தனிப்பட்ட விஜயமாகவே இருக்கலாம் என்றும் உத்தியோகபூர்வ நிகழ்ச்சி நிரல் எதுவும் குறித்த பயணம் தொடர்பாக வெளியிடப்படவில்லை என்றும் பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதனை நண்பர்களுடன் பகிரவும்.




    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

© 2016 tamilkurall All Rights Reserved.
back to top