Headlines
Admin-message

தெவரப்பெரும, ரணவீர ஆகியோருக்கு ஒரு வார கால பாராளுமன்றத் தடை

Published by tamilkurall on  | 


பாராளுமன்ற உறுப்பினர்களான பாலித தெவரப்பெரும மற்றும் பிரசன்ன ரணவீர ஆகியோருக்கு ஒருவாரகாலத் தடை விதிக்க பாராளுமன்றம் தீர்மானித்துள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினரும் பிரதி அமைச்சருமான பாலித தெவரப்பெரும மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணவீர ஆகியோர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒழுக்க விதிகளை மீறிச் செயற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை பாராளுமன்றில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் ஒருவர் காயமடைந்திருந்தார்.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஒருவார கால பாராளுமன்றத் தடை விதிக்குமாறு கட்சித் தலைவர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.

இதனை நண்பர்களுடன் பகிரவும்.




    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

© 2016 tamilkurall All Rights Reserved.
back to top