Headlines
Admin-message

தாஜுடீன் கொலை தொடர்பில் மோட்டார் போக்குவரத்து பிரதிக் பொலிஸ் மா அதிபரிடம் விசாரணை

Published by tamilkurall on  | 


பிரபல ரகர் வீரர் வசீம் தாஜூடீனின் கொலை தொடர்பில் மோட்டார் போக்குவரத்து பிரதிக் காவல்துறை மா அதிபரிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடத்தியுள்ளனர்.

காவல்துறை மோட்டார் போக்குவரத்துப் பிரிவின் பிரதிக் பொலிஸ் மா அதிபர் அமரசிறி சேனாரட்னவிடமே இவ்வாறு விசாரணை நடத்தப்பட்டுள்ளது. 2012ம்ஆண்டு மே மாதம் 17ம் திகதி வசீம் தாஜூடீன் கொலை செய்யப்பட்டிருந்தார்.

தாஜூடீன் கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்யுமாறு கொழும்பு மேலதிக நீதவான் கடந்த பெப்ரவரி மாதம் உத்தரவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தாஜூடீனின் மரணம் விபத்தினால் ஏற்பட்டது என சம்பவத்தின் போது மோட்டார் போக்குவரத்துப் பிரிவினர் அறிக்கை சமர்ப்பித்திருந்தனர். மதிலில் மோதிய வாகனம் வெடித்து தீப்பற்றிக் கொண்டதாகத் தெரிவித்துள்ளார்.

இதனை நண்பர்களுடன் பகிரவும்.




    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

© 2016 tamilkurall All Rights Reserved.
back to top