என்ன காரணத்திற்கான புனர்வாழ்வு அளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் மீளவும் கைது செய்யப்படுகின்றனர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த கைதுகள் வடக்கு கிழக்கு வாழ் தமிழர்களை பீதியடையச் செய்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பயங்கரவாத நடவடிக்கைகளை மேற்கொள்ள மீளவும் முயற்சிப்பதாக குற்றம் சுமத்தி அண்மையில் நான்கு முன்னாள் போராளிகள் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

