வவுனியா வைரவ புளியங்குளம் பகுதியில் தனியார் கல்வி நிலையத்திற்கு மாலைநேர வகுப்பிற்கு சென்றிருந்த மாணவி ஒருவரை இளைஞர்கள் சேட்டையில் ஈடுபட்ட இளைஞர்களை பொலிஸார் தேடிவருகின்றனர்.
இதனடிப்படையில் சம்பவத்தன்று மாலை மாணவிகள் வீடு திரும்பி கொண்டிருந்த வேளைமுற்சக்கவண்டியில் பாரிய ஒலியெழுப்பியவாறு பாடல்களை ஒலிரச் செய்து வந்த இளைஞர் குழுவொன்று மாணவிகளுடன் சேட்டை விட்டுள்ளது.
இதன்போது எவரும் உதவிக்கு செல்லாத காரணத்தால் மாணவிகள் செய்வதறியாது அயலில் உள்ள வீடுகளுக்குள் புகுந்துள்ளனர்.
இந்த நிலையில் வீட்டு உரிமையாளர்கள் மாணவிகளின் பாதுகாப்பு கருதி அவர்களை வீடுகளுக்கள் வைத்திருந்து இளைஞர்கள் சென்றவுடன் மீண்டும் வீடுகளுக்கு அனுப்பி வைத்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்தநிலையில், வவுனியாவில் இடம்பெறும் பொலிஸ் சிவில் பாதுகாப்பு குழு கூட்டத்தில் பாதுகாப்பு குழு உறுப்பினர்களால் வைரவ புளியங்குளம் சிறுவர் பூங்கா பகுதியில் இளைஞர்களின் அட்டகாசம் அதிகமாக உள்ளதால் அப்பகுதியில் பொலிஸ் காவலரண் ஒன்றினை அமைத்து தருமாறு கோரிக்கை விடுக்கப்பட்டள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இருந்த போதிலும் ஆளணி பற்றாக்குறை காரணமாக பொலிஸாரை அப்பகுதியில் கடமையில் ஈடுபடுத்தமுடியாது உள்ளதாக பொலிஸார் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

