மடு பொலிஸ் பிரிவுக்குற்பட்ட முள்ளிக்குளம் புலிப்பறங்கி பகுதியில் உள்ள குளம் ஒன்றினுள் சட்டவிரோதமான முறையில் மீன் பிடியில் ஈடுபட்ட 5 பேரை நேற்றைய தினம் மடு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த குளத்தில் உள்ள நீரை முற்றாக வெளியேற்றி மீன் பிடியில் ஈடுபட்ட 5 பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சுமார் 35 ஏக்கர் வயற்காணியை கொண்ட இந்த குளம் காட்டுப் பகுதியை அண்டி காணப்படுகின்றது.
எனினும் குறித்த வயற்காணிகள் பயிரிடப்பட்டு அடுவடைசெய்யப்பட்டுள்ள நிலையில் குளத்தில் எஞ்சியுள்ள நீரை அப்பகுதியில் உள்ள காட்டு மிருகங்கள் மற்றும் பறவைகள் அருந்தி வருகின்றன.
இந்த நிலையில் குளத்தில் உள்ள நீரை வெளியேற்றி மீன் பிடியில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டில் குறித்த 5 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ளவர்கள் தற்போது மடு பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகளுக்கு உற்படுத்தப்பட்டு வருவதாகவும் மடு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விசாரணைகளை அடுத்து சந்தேகநபர்கள் மன்னார் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதாகவும் மடு பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

