மகிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு குறித்து பேசுவதற்கான தகுதி, சரத் பொன்சேகாவுக்குஇல்லை என்று பிவித்துர ஹெல உறுமயவின் பொது செயலாளர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
கம்மன்பிலவின் பேஸ்புக் கணக்கில் அவர் இந்த விடயத்தை பதிவு செய்துள்ளார்.
மகிந்தவின் பாதுகாப்பு தொடர்பில் தினேஸ் குணவர்தன, பிரதமரிடம் கேள்வி எழுப்பினார்.இதற்கு மறுமொழி வழங்கிய பின்னர் சரத் பொன்சேகாவை பிரதமர் உரையாற்றுமாறு அழைத்தார்.
ஆனால் அவருக்கு பதிலாக இந்த விடயத்துடன் தொடர்புடைய அமைச்சரையே பிரதமர் உரையாற்றஅழைத்திருக்க வேண்டும் என்று கம்மன்பில கூறியுள்ளார்.
அதேநேரம் ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித்த தெவரப்பெரும,ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணவீரவைதாக்கியதைத் தொடர்ந்தே தாங்கள் ஆர்ப்பாட்டத்தை ஆரம்பித்தாகவும் அவர்குறிப்பிட்டுள்ளார்.

