பாராளுமன்றில் அமளி அவை நடவடிக்கைகள் ஐந்து நிமிடங்கள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. இன்று பாராளுமன்ற அமர்வுகள் ஆரம்பானதன் பின்னர், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பாதுகாப்பு தொடர்ப தினேஸ் குணவர்தன கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதிலளித்திருந்தார்.
ஜனாதிபதிக்கும் தமக்கும் காவல்துறை பாதுகாப்பே வழங்கப்பட்டுள்ளதாவும், உரிய முறையில் பயிற்றப்பட்டவர்களே பாதுகாப்பு வழங்கியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தேவை என்றால் மேலும் காவல்துறை பாதுகாப்பு வழங்கத் தயார் என பிரதமர் தெரிவித்துள்ளார். யுத்தத்தின் பங்கேற்ற சரத் பொன்சேகாவிற்கும் இதே பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது தன்னுடைய பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அதனால் விளக்கம் அளிக்க வேண்டுமெனவும் சரத் பொன்சேகா எழுந்த போது மஹிந்த தரப்பினர் கூச்சமிட்டு குழப்பம் விளைவித்தனர். இதன் போது ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.

