Headlines
Admin-message

காதல் வசத்தால் 14 வயது சிறுமி கர்ப்பம் 27 வயதுடைய இளைஞன் கைது

Published by tamilkurall on  | 



பொகவந்தலாவை – எல்டப்ஸ் பகுதியில் பாடசாலை மாணவி ஒருவர் கர்ப்பமாகியுள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

14 வயதான மாணவி ஒருவரே இவ்வாறு கர்ப்பமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த மாணவி தலைவலி மற்றும் தலைசுத்து ஏற்பட்டமையை அடுத்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலேயே அவர் கர்ப்பமாகியுள்ளமை தெரியவந்துள்ளது.

சம்பம் குறித்து வைத்தியசாலையின் ஊடாக பொகவந்தலாவை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இதன்படி, அதே பகுதியைச் சேர்ந்த 27 வயதான ஒருவர் பொகவந்தலாவை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த மாணவிக்கும் இளைஞனுக்கும் இடையில் காதல் உறவு இருந்து வந்ததாக மாணவியினால் பொலிஸாருக்கு அளிக்கபட்ட வாக்குமுலத்தின் ஊடாக தெரியவந்துள்ளது.


இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஹட்டன் நீதிமன்றத்தில் நாளை ஆஜர்ப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதனை நண்பர்களுடன் பகிரவும்.




    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

© 2016 tamilkurall All Rights Reserved.
back to top