Headlines
Admin-message

ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் உண்ணாவிரத போராட்டம் முன்னெடுப்பு

Published by tamilkurall on  | 


ராமநாதபுரம் மாவட்டம் மீனவக் கிராம மக்கள் எதிர்வரும்  9ஆம் திகதி உண்ணாவிரத போராட்டம் ஒன்றை முன்னெடுக்க உள்ளதாக அறிவித்துள்ளனர்.

சவுதி அரேபியாவில் தரகர்களிடம் சிக்கித் தவிக்கும் மீனவர்களை மீட்டுத்ருமாறு வழியுறுத்தியே இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

கடந்த ஜந்து வருடங்களுக்கு முன்னர் ராமநாதபுரம் மாவட்டம்
திருப்பாலைக்குடி,மோர்பண்ணை,கராங்காடு முள்ளிமுனை உள்ளிட்ட மீனவக்கிராமங்களைச் சேர்ந்த 46 மீனவர்கள் மற்றும் நாகையைச்சேர்நத 7 பேரும் கன்னியாகுமரியைச் சேர்ந்த 2 பேர் கடலூரைச் சேர்ந்த 5 பேரும் தஞ்சையைச்சேர்ந்த 2 பேர் உள்ப்பட 62 பேர் சவுதியில் உள்ள தரகர் ஒருவரிடம்  மீன் தொழிலுக்காக  சென்றிருந்தனர்.

இந்த நிலையில் குறித்த மீனவர்கள் நீண்டகாலமாக ஊதியம் வழங்கப்படாமல் அடிமைகளாக பணிக்கு அமர்த்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் தம்மை நாட்டுக்கு அனுப்புமாறு குறித்த தரகரிடம் மீனவர்கள் கோரியுள்ள போதிலும் எந்த முடிவுகளும் எட்டப்படவில்லை என மீனவர்களின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

எனினும் இந்த விடயம் தொடர்பில் மானில அரசிற்கு தாம் அறிவுறுத்தியிருந்த போதும் மானில அரசு எந்தவித நடவடிக்கைகளையும் மேற்கோள்ளவில்லை எனவும் அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இந்த நிலையிலேயே  தமது உறவுகளை மீட்டுத்தர வேண்டும் என வழியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக ராமநாதபுரம் மாவட்டம் மீனவர்கள் அறிவித்துள்ளனர்.

இதனை நண்பர்களுடன் பகிரவும்.




    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

© 2016 tamilkurall All Rights Reserved.
back to top