இதற்கென 70 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக வடமாகாண போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது.
அந்த அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வட மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் 2016 ஆம் ஆண்டுக்கான மாகாண அபிவிருத்தி நன்கொடை மற்றும் பராமரிப்பு நிதி ஒதுக்கீட்டின் கீழ் இந்த வீதி அபிவிருத்தி திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய திட்டத்தின் முதற்கட்டமாக வவுனியா வடக்கு பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட, நெடுங்கேணி தொடக்கம் கூளாங்குளம் வரையான வீதியினை அமைச்சர் பா. டெனிஸ்வரன் நேற்றைய தினம் ஆரம்பித்து வைத்தார்.
இந்த நிகழ்வில் அமைச்சர் பா.டெனிஸ்வரன் மற்றும் முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் உள்ளிட்ட உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
