Headlines
Admin-message

தீவுப்பகுதிகளிலுள்ள நாட்டு படகுகளில் அதிகாரிகள் ஆய்வு : முறைகேடுகள் இருந்தால் நடவடிக்கை எடுக்கபடும்

Published by tamilkurall on  | 


ராமேஸ்வரம் தீவுப்பகுதிகளிலுள்ள நாட்டு படகுகளை மீன்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

 ஆண்டுதோறும் ஏப்பரல் 15 முதல் மே 29 வரையில் மீன் இனப்பெருக்க காலமாக கருதி விசைபடகுகள் மீன்பிடிக்க அரசு தடைவிதித்து வருகிறது.

இநத் காலகட்டங்களில் நாட்டுபடகுகள் ஆய்வுக்கு  உட்படுத்தப்படும் .

அதற்கமைய இன்று ராமேஸ்வரம் துறைமுகம் சங்குமால் கடற்கரை முகுந்தராயர்சத்திரம் தனுஷ்கோடி தங்கச்சிடம்  குந்துகால்,பாறையடி,சேராங்கோட்டை  மற்றும் பாம்பன் உள்ளிட்ட தீவபு;புகதிகளில் உள்ள சுமார் ஆயிரத்து 700 க்கும் மேற்பட்ட நாட்டுபடகுகளில் ராமநாதபுரம் மாவட்ட மீன்துறை அதிகாரிகள் மற்றும் மேற்பார்வையாளர்கள் கொன்ட குழுவினர்  படகுகளின் இயந்திர திறன், பாதுகாப்பு, நீளம் அகலம் மற்றும் படகுகளின் தன்மை படகுளின் ஆவனங்கள் மானிய டீசல் அட்டைகள் மற்றும் அரசால் அனுமதிக்கப்பட்ட மீன்பிடி வலைகள்  உள்ளிட்டவைகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

 படகுளின் ஆவனங்கள் மற்றும் மானிய டீசல் முறைகேடாக பயன்படுத்துவது உள்ளிட்டவைகள் ஆய்வில் கன்டறியப்பட்டால் படகு உரிமையாhள்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் எனவும் அதிகாரிகளின் சோதனைக்கு படகு உரிமையாளர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் மீன்துறை அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இதனை நண்பர்களுடன் பகிரவும்.




    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

© 2016 tamilkurall All Rights Reserved.
back to top