துறைசார் அமைச்சரின் அனுமதியை பெற்றுக்கொள்ளாது இனி வரும் காலங்களில் ஊடக அறிக்கைகளை வெளியிட வேண்டாம் என பிரதமர் தெரிவித்துள்ளார்.
சட்ட திட்டங்களுக்கு அடி பணிந்து செயற்படுமாறு போபகேவிற்கு, பிரதமர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
அரசியல் விவகாரங்கள் தொடர்பில் ஊடக அறிக்கைகளை வெளியிடும் உரிமை செயலாளருக்கு கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த ஊடக அறிக்கை விவகாரம் தொடர்பில் ஜனாதிபதியுடன் விரைவில் பேச உள்ளதாக ஊடக அமைச்சர் மற்றும் ஊடக செயலாளர் ஆகியோரிடம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

