Headlines
Admin-message

மேற்கு இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டரில் 6.1 அலகாக பதிவு

Published by tamilkurall on  | 


மேற்கு இந்தோனேசியாவில் இன்று லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கமானது ரிக்டரில் 6.1 அலகாக பதிவாகியுள்ளது.

சுமத்ரா தீவில் உள்ள மேற்கு லாம்புங் மாகாணத்தில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவாகியுள்ளதாக இந்தோனிசியா வானியல் மற்றும் புவி ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

பசுபிக் பெருங்கடலை சுற்றிலும் பல்வேறு பகுதியில் தொடர்ச்சியாக நிலநடுக்க ஏற்பட்டு வருகிறது. முன்னதாக தென் அமெரிக்காவின் ஈக்வடார் பகுதியிலும், மெக்ஸிகோவை ஒட்டிய சில பகுதிகளிலும், சில தினங்களுக்கு முன்பு வானுவட்டு பகுதியிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது. 

இந்த நிலையில், இன்று மேற்கு இந்தோனிசியா பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. உயிரிழப்புகள் மற்றும் பாதிப்புகள் குறித்த விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை.

இதனை நண்பர்களுடன் பகிரவும்.




    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

© 2016 tamilkurall All Rights Reserved.
back to top