Headlines
Admin-message

இன்று முதல் வற் வரி அதிகரிப்பு! தேசிய வருமான வரி திணைக்களம் அறிவிப்பு

Published by tamilkurall on  | 


பெறுமதி சேர்த்துக்கொள்ளப்பட்ட வரிக்கமைய நூற்றுக்கு 11 வீதமான வரியானது 15 வீதமாக இன்று முதல் அதிகரிக்கும் என்று தேசிய வருமான வரி திணைக்களம் அறிவித்துள்ளது. 
நிதியமைச்சின் முன்மொழிவுக்கமைய இவ் வற் வரி மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதுவரை 11 வீதமாக இருந்த வரியானது இன்று நள்ளிரவுக்கு முதல் மாற்றப்படாவிட்டால் நாளை(03) தொடக்கம் மாற்றமடையும்.

எவ்வாறிருப்பினும் இதுவரை வரி சேர்க்கப்படாது மின் கட்டணத்திற்கு இதற்குப் பின்னர் வரி சேர்த்துக்கொள்ளப்படாது என்று நிதியமைச்சு தெரிவித்துள்ளது. எனினும் நூற்றுக்கு 2 வீதம் தேசிய அபிவிருத்திக்கு உள்ளடக்கப்படும் என்றும், இவ் மாற்றம் நாளை(03) தொடக்கம் மின்கட்டணத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

தண்ணீர் கட்டணம் போன்றே மின் தொடர்பாடல் துறையிலும் இவ்வரி தாக்கம் செலுத்தும். மருந்துகளுக்கான வரி அதிகரிக்கப்படாவிடினும் தனியார் துறை சுகாதார சேவைகளுக்கான வரியில் மாற்றம் செய்யப்படவுள்ளது. எது எவ்வாறிருப்பினும் இவ்வரி அதிகரிப்பானது சாதாரண மக்களின் வாழ்க்கையில் தாக்கம் செலுத்துவதற்கு இடமளிக்கப்பட மாட்டாது என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். தற்போது நிலவும் பொருளாதார சிக்கலுக்கு தீர்வாக குறித்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதனை நண்பர்களுடன் பகிரவும்.




    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

© 2016 tamilkurall All Rights Reserved.
back to top