Headlines
Admin-message

புதிய பயங்கரவாதத் தடைச் சட்டமொன்று அறிமுகம் செய்யப்படும் - பிரதமர்: குளோபல்

Published by tamilkurall on  | 



புதிய பயங்கரவாதத் தடைச் சட்டமொன்று அறிமுகம் செய்யப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

பிரித்தானிய முறைமையின் அடிப்படையில் இந்த புதிய பயங்கரவாதத் தடைச் சட்டம் அமுல்படுத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது நடைமுறையில் காணப்படும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இந்த புதிய சட்டம் பதிலீடு செய்யும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் கைது செய்யப்பட்டவர்கள் புதிய பயங்கரவாத அமைப்பு ஒன்றை உருவாக்கும் முனைப்புக்களில் ஈடுபட்டனர் என்ற அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

எவ்வாறெனினும் தமிழீழ விடுதலைப் புலிகளோ அல்லது வேறும் பயங்கரவாத தரப்பினரோ மீளவும் தலைதூக்க இடமாளிக்கப்படாது என அவர் தெரிவித்துள்ளார்.

சில ஊடகங்கள் பயங்கரவாதத்தை தூண்டும் வகையில் செய்திகளை வெளியிட்டு வருவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இதனை நண்பர்களுடன் பகிரவும்.




    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

© 2016 tamilkurall All Rights Reserved.
back to top