நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின்தலைவருமான திரு.முத்து சிவலிங்கம் சுகவீனம் காரணமாக நுவரெலியா மாவட்டவைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் இன்று மாலை அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இவ்வாறு அனுமதிக்கப்பட்ட இவர் நுவரெலியாவில் இன்று நடந்த மேதின கூட்டத்தில் கலந்து கொண்டு பிறிதொரு கூட்டம் ஒன்றுக்கு அவசரமாக செல்ல வேண்டும் என கோரி மகிழ்ச்சியுடன் சென்றார்.
இருந்தும் இன்று மாலை அவர் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைக்கு சென்ற நிலையில் மாரடைப்பு நோய் ஏற்பட்டிருப்பதாக தெரியவந்ததையடுத்து, அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

