Headlines
Admin-message

நாளை பொது விடுமுறை வழங்கப்படாது: உள்விவகார அமைச்சு அறிவிப்பு

Published by tamilkurall on  | 

நாளைய தினத்தை பொது விடுமுறையாக அறிவிக்குமாறு இலங்கைத் தொழில் மற்றும் தொழில் உறவுகள் அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.
தொழில் அமைச்சின் கடிதத் தலைப்பில் வெளியிப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தொழில் மற்றும் தொழில் உறவுகள் அமைச்சர் ஜோன் செனவிரட்ன இந்தக் கோரிக்கையை அரசாங்கத்திடம் முன்வைத்துள்ளார்.
தனியார் துறையைச் சேர்ந்த அனைத்து ஊழியர்களுக்கும் (அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த) பொது விடுமுறை வழங்குமாறு கோரியுள்ளார்.
தொழிலாளர் தினம் ஞாயிற்றுக்கிழமை அனுஸ்டிக்கப்படுவதனால் இவ்வாறு பொது விடுமுறை வழங்குமாறு கோரியுள்ளார்.
விடுமுறை வழங்குமாறு தொழிற் சங்கங்களும் தொழிலாளர்களும் தம்மிடம் கோரிக்கை விடுத்திருந்தனர் என அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, நாளை பொது விடுமுறை கிடையாது என உள்விவகார அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
தொழிலாளர் தினம் ஞாயிற்றுக்கிழமை அனுடிக்கப்பட்டாலும் நாளை பொதுவிடுமுறை வழங்கப்படாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
புத்தாண்டு மற்றும் செவாக் பௌர்ணமி தினத்தின் போது இவ்வாறு விசேட விடுமுறைகள் வழங்கப்பட்ட போதிலும் மே தினத்திற்காக இவ்வாறு விடுமுறை வழங்கப்படாது என அவர் கொழும்பு ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

இதனை நண்பர்களுடன் பகிரவும்.




    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

© 2016 tamilkurall All Rights Reserved.
back to top