வவுனியா மாவட்ட, வவுனியா தெற்கு பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட, அவுசதப்பிட்டிய கிராமத்தில் வடக்கு கிராம அபிவிருத்தித் திணைக்களத்தால் ரூபா 2.5 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் காளான் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
குறித்த காளான் உற்பத்தி நிலையத்தினை உத்தியோகபூர்வமாக திறந்து வைத்த வடக்கு மாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரன், அதன் பயனாளிகளையும் சந்தித்து கலந்துரையாடினார்.
இக்காளான் உற்பத்தித் திட்டத்தின் மூலமாக 05 குடும்பங்கள் தமது வாழ்வாதாரத்தை நடத்துவதாகவும், இதேபோன்ற நிதி ஒதுக்கீட்டில் வவுனியா அக்போபுர என்னும் கிராமத்திலும் இவ்வாறான ஓர் வேலைத் திட்டம் இடம்பெறுவதாகவும் அமைச்சர் இதன் போது குறிப்பிட்டுள்ளார்.
நிகழ்விற்கு அமைச்சரின் வவுனியா மாவட்ட இணைப்பாளர் எஸ்.மயூரன், அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன், கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் ஜே.ஜே.சி.பெலிசியன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
