இந்திய இலங்கை உடன்படிக்கையின் பிரகாரம் ஏற்படுத்தப்பட்ட 13ஆவது சட்டத்திருத்தத்தின் படியே இலங்கை பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என தமிழக காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் மே மாதம் நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்ற கழக கூட்டணியுடன் இணைந்து போட்டியிடவுள்ள காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் முன்வைக்கப்படுகின்ற கோரிக்கைகளை அமுல்படுத்த இலங்கை அரசாங்கத்திற்கு இந்திய மத்திய அரசாங்கம் அழுத்தங்களை கொடுக்க வேண்டும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவின் அனுசரணையுடன் இலங்கையில் ஏற்படுத்தப்பட்ட 13ஆவது சட்டத்திருத்தத்தின் ஊடாகவே இலங்கை தமிழர் பிரச்சினைக்கு தீர்வை காண முடியும் என அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

