500 மெகாவோர்ட் மின் உற்பத்தியை பெற்றுக் கொள்ளும் வகையில் நிர்மாணிக்கப்படவுள்ள சம்பூர் அனல் மின் உற்பத்தி நிலையத்தின் முதலாம் கட்ட பணிகளுக்கான பூரண ஒத்துழைப்புக்களை தாம் வழங்குவதாக ஜப்பான் தெரிவித்துள்ளது.
ஜப்பான் தூதுவர் கெனவ் சுகனுகாவிற்கும்இ மின்சக்தி அமைச்சர் ரஞ்ஜித் சியம்பலாபிட்டியவிற்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே ஜப்பான் தமது இணக்கப்பாட்டை தெரிவித்துள்ளது.
அனல் மின் உற்பத்தி நிலையத்திற்காக உலகத்தில் தற்போது காணப்படுகின்ற அதி தொழில்நுட்பத்தை சம்பூர் அனல் மின் உற்பத்தி நிலையத்திற்கு கொண்டு வரவுள்ளதாகவும் ஜப்பான் தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் இந்த திட்டத்தை முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை சம்பூர் அனல் மின் உற்பத்தி நிலையத்தின் ஆரம்ப கட்ட பணிகள் எதிர்வரும் ஆண்டு ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

