Headlines
Admin-message

வீட்டு பணியாளர் தேவையென கூறி பெண் துஸ்பிரயோகம் - இரு புலனாய்வு பொலிசார் விளக்கமறியல்

Published by tamilkurall on  | 


பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பொலிஸ் புலனாய்வு உத்தியோகஸ்தர்கள் இருவரை எதிர்வரும் 10ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.கணேசராஜா, உத்தரவிட்டார்.
மட்டக்களப்பு, காத்தான்குடிப் பொலிஸ் பிரிவில் பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் மேற்படி இரு சந்தேக நபர்களையும் திங்கட்கிழமை இரவு பொலிஸார் கைதுசெய்தனர்.
இந்தச் சந்தேக நபர்கள், 38 வயதுடைய குறித்த பெண்ணை வீடு ஒன்றுக்கு பணியாளர் தேவையெனக் கூறி முச்சக்கரவண்டி ஒன்றில் காத்தான்குடிப் பிரதேசத்திலுள்ள வீடொன்றுக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு அழைத்துச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது.
பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளான பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனை நண்பர்களுடன் பகிரவும்.




    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

© 2016 tamilkurall All Rights Reserved.
back to top