Headlines
Admin-message

பயங்கரவாத ஒழிப்புக்கு புதிய சட்டம்

Published by tamilkurall on  | 

பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு பதிலாக பயங்கரவாத ஒழிப்பு சட்டமூலமொன்றை புதிதாக தயாரித்து வருவதாக சட்ட ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க ஐக்கிய நாடுகள் சபைக்கு தெரிவித்துள்ளார்.
தற்போது தயாரிக்கப்பட்டு வருகின்ற பயங்கரவாத ஒழிப்பு சட்டமூலத்திற்கு ஐக்கிய நாடுகள் சபையின் தொழில்நுட்ப ஒத்துழைப்புக்களை பெற்றுக் கொள்ள எதிர்பார்க்கப்படுகின்றது.
அமெரிக்காவின் நிவ்யோர் நகரில் நேற்று நடைபெற்ற கலந்துரையாடலொன்றின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் பயங்கரவாத ஒழிப்பு பிரிவின் நிறைவேற்று குழு அலுவலகத்தின் நிறைவேற்று பணிப்பாளர் ஜோன் போல் லெபோர்டுடன் அமைச்சர் சாகல ரத்நாயக்க நேற்றைய தினம் கலந்துரையாடல்களை நடாத்தியுள்ளார்.

இதனை நண்பர்களுடன் பகிரவும்.




    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

© 2016 tamilkurall All Rights Reserved.
back to top