பதுளையில்- தெல்பெத்த பிரதேசத்தில் குளிப்பதற்காக வீட்டுக் குளியலறைக்கு சென்ற சிறுமி ஒருவர் தீவைத்து தற்கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சிறுமி பதுளை தமிழ் மகாவித்தியாலயத்தில் கல்வி கற்கும் 16 வயதுடையவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சிறுமியின் தற்கொலைக்கான காரணம் இன்னும் தெரிய வரவில்லை எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்தசம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொள்வதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

