Headlines
Admin-message

தலைமன்னாரில் போதைப் பொருள் கண்டுபிடிப்பு

Published by tamilkurall on  | 


தலைமன்னார், ஜே.ஆர்.எஸ். கிராமத்திற்கு அருகில் உள்ள காட்டுப் பகுதியில் இருந்து ஒரு தொகை இந்திய தயாரிப்பு ஹேன்ஸ் போதைப் பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

மன்னார், மோசடி ஒழிப்பு பிரிவு அதிகாரிகள் குழுவினால் இவை கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு கூறியுள்ளது. 

26 கிலோ 400 கிராம் நிறையுடைய ஹேன்ஸ் போதைப் பொருள் இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்றும் மன்னார் நீதவான் நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்பிக்க உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். 

இதனை நண்பர்களுடன் பகிரவும்.




    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

© 2016 tamilkurall All Rights Reserved.
back to top